சென்னை மாவட்டம் பெருங்குளத்தூர் கிருஷ்ணா சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). மனைவி கிருத்திகா(40). இருவரும் மின் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து அதே பகுதியில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதிகமான கடன் தொந்தரவு மற்றும் மனைவி இல்லாததால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ் தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு எமர்ஜென்சி என குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அதனை சற்று தாமதமாக பார்த்த கிருத்திகா விஷயத்தை தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனக்கு தானே மின்வடத்தை உடலில் சுற்றி வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மின் இணைப்பைத் துண்டித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.