மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு ரீல்ஸ் போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அருங்காட்சியத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசை பெறும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இந்த ரீல்ஸ் போட்டியில் சில விதிமுறைகள் உள்ளது. அதில் நபர் ஒருவர் இரண்டு ரிலீஸ் வரை போஸ்ட் செய்யலாம்.

ஒவ்வொரு ரீல்ஸ் 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். இது ஒரிஜினலாகவும் புதிதாகவும் உருவாக பட்ட ரீல்ஸ்களாக இருக்க வேண்டும். இந்த ரீல்ஸ்களை வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை போஸ்ட் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளது. குறிப்பாக இவை சென்னை வாழ்வியலை அடையாளப்படுத்துவதாகவும் சென்னை அருங்காட்சியகத்தின் அழகியலை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.