
முன்னாள் அமைச்சர் ஆற்காடு என்.வீராசாமியின் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி அரசு நிலத்தில் மருத்துவமனை கட்டியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட மனுவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், “‘சமூகநீதி பாதுகாவலர்கள் எனக்கூறும் அரசியல் கட்சிகள் மக்கள் விருப்பத்தை மதிக்க வேண்டும். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்கும் நத்தம் நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளது.