
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனிமொழி. இவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தாளை ஊராட்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கனிமொழியின் வாகனத்தை வழி மறித்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கனிமொழி சிறுவர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது அவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென உரிமையோடு கேட்டுள்ளனர். இதனால் சிறுவர்களை பெரியதாழை ஊராட்சியில் இருக்கும் கடைகளுக்கு சென்று கைப்பந்து, கைப்பந்து வலைகள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பியுள்ளார். இது தொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.