ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் அந்த மேடையில் அண்ணாமலை, தமிழிசை இடையேயான உட்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா தமிழிசையை கண்டித்ததாக வீடியோ வைரலானது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை அந்த விஷயம் குறித்து கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சந்தித்த சவால்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து தான் கேட்டிருந்தார். தொகுதியில் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரையும் வழங்கினார் என்று தெரிவித்துள்ளார்.