சிவகங்கையில் புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் போது தினசரி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான ராஜேஷ் கண்ணன் என்ற 53 வயது நபர் நடனம் ஆடினார். இவர் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் சமீப காலமாக மேடையில் நடனமாடும் போது மற்றும் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஆசிரியர் ஒருவர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.