ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆர்.சி.பி-டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதலில் பரபரப்பான தருணம் உருவானது. ஆர்.சி.பி அணிக்காக பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த கே.எல். ராகுல் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சூடான காட்சி வீடியோவில் பதிவாகி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த நேரம் நேரடி ஒளிபரப்பில் விவாதத்தின் காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், போட்டிக்கு பிறகு முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா விளக்கம் கொடுத்தார். அவர் கூறியதாவது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பீல்டிங் அமைப்பதற்காக அதிக நேரம் எடுத்ததை விராட் கோலி கண்டித்தாராம். இதனால் கோபமடைந்த ராகுல், “இப்படி நேரம் கழித்தால் ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சினை ஏற்படும், அதனால் நம்மையே பின்தள்ளும்!” என பதிலடி கொடுத்ததாக சாவ்லா கூறியுள்ளார்.

 

ஆனால், விராட் கோலி விரைவாக தன்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்தி மீண்டும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். இதற்கிடையில் ஆர்.சி.பி போட்டியில் வெற்றியும் பெற்றது. ரசிகர்கள் இந்த வாக்குவாத வீடியோவை தொடர்ந்து ஷேர் செய்து, “இருவர் நண்பர்களா? எதிரியா?” என்று கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்!