
கோவையைச் சேர்ந்த 53 வயது பெண் தனது தோழியுடன் நேற்று முன் தினம் அதிகாலை சைக்கிளிங் சென்று கொண்டிருந்தார். அவர்கள் கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இரண்டு பெண்களும் அவரிடம் இருந்து தப்ப சைக்கிளில் வேகமாக சென்றனர். ஆனாலும் துரத்தி சென்று ஆபாச சைகைகளை காண்பித்து விட்டு வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஈரோட்டைச் சேர்ந்த கவின் என்பவரை கைது செய்தனர். அவர் கோவையில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பெண்களின் நோட்டமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே பைக்கில் வேகமாக தப்பி சென்றபோது தவறி விழுந்ததால் கவின் கை முறிந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற இடத்தில் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.