
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த 8-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் திடீரென அது பெரும் வன்முறையாக மாறிவிட்டது. இந்த வன்முறையில் ஏராளமான இந்துக்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த வன்முறையை தடுக்க மம்தா பானர்ஜி அரசு தவறிவிட்டதாகவும் சாடியுள்ளது.
ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் தான் இந்த வன்முறையை வந்தது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வன்முறையில் சாதாரண அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அதன் பிறகு 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியை விட்டு இந்துக்களிடம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வளவு பிரச்சனை நடக்கும்போது மம்தா பானர்ஜி மௌனம் காப்பது ஏன் என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.