பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதோடு, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர்,கிராமத் தொழில் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது