தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றார். இதனை தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் கூறியுள்ளது என்றும் கூறினார். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு 15 மில்லியன் டாலர் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது என்றார்.

அதன் பிறகு மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளையும் தாண்டி சாதனை படைத்து வருகிறோம். இது தனிமனித சாதனை கிடையாது. இது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என சேர்ந்து கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சமூக நீதி, மதசார்பின்மை மற்றும் சுயமரியாதை என அதிக அதிகாரம் கொண்ட மாநிலமாக நாம் உழைக்கிறோம் என்று கூறினார். மேலும் தீண்டாமையின் வெளிப்பாடாக இருக்கும் காலனி என்ற சொல் நீக்கப்படும் என்றும் கூறினார்.