கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே மற்றும் ஜூன் மாதத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமா என்று அரசு தான் ஆலோசிக்க வேண்டும்.