
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும
பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த CrowedStrike நிறுவனம் சைபர் பாதுகாப்பது வழங்கி வருகிறது. இதற்கிடையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓஎஸ் செயலிழப்பால் Crowed Strike நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 11% சரிந்துள்ளது.
இதனால் இந்த நிறுவனத்துக்கு 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது . உலக அளவில் மைக்ரோசாப்ட் சேவையை பயன்படுத்தி வந்த நிதி, விமானம், ரயில், ஊடக நிறுவனங்களின் சேவை முடக்கம்தான் இதற்கு காரணம் என்று அந்த நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.