
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மணவாள நகரில் இருக்கும் எம் வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து டாக்டர் மலர்வண்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து 9 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.