
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் மன வேதனை அடைந்து சித்திரக்கோட் நீர்வீழ்ச்சி சென்று அருவியில் குதித்துள்ளார். பின்னர் சரிவிலிருந்து தப்பி நீந்தி கரையை அடைந்துள்ளார்.
அந்த பெண்ணை அருவியின் விளிம்பில் பார்த்த சிலர் குதிக்க வேண்டாம் என்றும் அவசரப்பட வேண்டாம் என்றும் தடுக்க முயற்சித்துள்ளனர். சிலர் இதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
#चित्रकोट वाटरफॉल में 90 फीट ऊंचाई से लड़की ने लगाई छलांग#Chhattisgarh #ChhattisgarhNews #viral #ViralVideo pic.twitter.com/2nvasLyBU2
— BHILAI TIMES (@bhilaitimes) July 19, 2023