இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கல்வித்துறை பெயரை பயன்படுத்தி தென் மாவட்டங்களில் மரும நபர்கள் பண மோசடி செய்து வருகிறார்கள்.

பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக கூறி, QR code ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கு சரிபார்க்கப்படும் என தெரிவித்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்து வருகின்றனர். இதில் ஏமாற்றப்படுபவர்கள் பெரும்பாலும் கிராம பகுதி மக்களாக இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.