மாநிலங்களவையில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷை தாக்கி பேசுவது போன்று இருந்ததற்கு பதிலளித்து பேசிய அவர், எப்போதும் போல மூன்றில் ஒரு பங்கு என்று பிரதமர் மோடி திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அவருடைய ஆட்சிக்காலத்தை குறிப்பது அல்ல. இது உயிரியல் ரீதியாக பிறக்காத நம்முடைய பிரதமர் மோடியை குறிக்கிறது.

ஜூன் 4-ம் தேதியன்று தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக பிரதமர்  தோல்வியடைந்த பிறகு, அவருடைய செல்வாக்கு மூன்றில் ஒரு பங்காக சரிவை சந்தித்துள்ளது. மேலும் அவர் தன்னுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக வேறு இரண்டு N-களை (நாயுடு, நிதிஷ்) நம்பி உள்ளார். எனவே, அவருடைய அரசு நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று கடுமையாக  விமர்சித்துள்ளார்.