தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை பற்றி விஜய் நேரடியாகவே விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது நடிகரும் பாஜக கட்சியின் பிரமுகருமான சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது விஜய் மத்திய அரசை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணயம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பிரதமர் மோடியை உலக தலைவர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது. ஏன் வரி பங்கீடு குறைகிறது. எவ்வளவு ஒதுக்கீடு செய்துள்ளனர் போன்ற விவரங்களை பொதுக்குழுவில் பேசி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் மத்தியில் நடக்கும் சிறந்த ஆட்சியை உலகம் போற்றும் பிரதமர் மோடியை சாதாரண மனிதராக எண்ணி கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.