திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாய்க்கனேரி மலைப்பகுதியில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளைகுட்டை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி- செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்து டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.