தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் ‌ சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் லவ் ரெட்டி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது. படம் முடிவடைந்த பிறகு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் மேடையில் தோன்றி பேசினர்.

அப்போது அந்த படத்தில் வில்லனாக நடித்தவர் காதலர்களை பிரிப்பது போன்று காட்சி இருக்கும். அந்த சமயத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் திடீரென மேடையில் ஏறி வந்து அந்த நடிகரின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார். அந்த நடிகரின் பெயர் ராமசாமி. இதனால் சற்று நேரம் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.