தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுல்தான் இப்ராஹிம். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முகமது சுல்தான் காரைக்கால் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முகமது மது போதையில் காரைக்கால் பகுதியில் சுற்றித்திரிந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு முகமது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முகமதுவை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முஹம்மதுவை கைது செய்தனர். இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முகம்மது சுல்தானுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.