ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இதனால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்கலங்கி நின்றார். அதே நேரத்தில் எதிரணியான கொல்கத்தாவின் ஆட்டத்தையும் பாராட்டினார். இதனையடுத்து போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

இந்நிலையில் காவியாவின் இந்த அணுகுமுறைக்கு ஆதரவாக இணையயவாசிகள் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் பலரும் எங்களை நீங்கள் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். யாராலும் வெறுக்க முடியாத ஒரே பெண் நீங்கள் என்று கூறி வருகிறார்கள்.