அமெரிக்காவில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இசாஹியா கிராஸா. இவர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு, உடை கொடுத்து தன்னால் முயன்ற உதவிகளை செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு ஒரு பரிசுப் பையை கொடுக்கிறார். அந்தப் பையினுள் சாவி இருந்தது. அதைக் கண்ட அந்தப் பெண்ணிடம் அவர் நான் உங்களுக்கு ஒரு வீட்டை பரிசாக தருகிறேன் என்று கூறினார். இதனை கேட்டு அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை பரிசாக வழங்கிய வீட்டிற்கு இசாஹியா அழைத்து சென்றார். அந்த வீடு பல வசதிகளுடன் இருந்தது. இதனைக் கண்ட அந்தப் பெண் மிகவும் சந்தோஷப்பட்டார். இந்தப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக வீடு இல்லாமல் இருந்துள்ளார். இதனால்தான் நான் அந்த பெண்ணிற்கு இந்த பரிசை வழங்கினேன் என்று இசாஹியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருக்கிறார். மேலும் இவரது இந்த பதிவிற்கு பலரும் தங்களது விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து இசாஹியாவை பாராட்டி வருகிறார்கள்.