
2023 ஆசியக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி இடையே வார்த்தைப் போர் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆசியக் கோப்பை 2023க்கு நல்ல தொடக்கத்தை அளித்த போதிலும், வேகத்தைத் தொடர முடியாமல் சூப்பர் 4 கட்டத்திலிருந்து வெளியேறியது. ஹரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரின் காயங்களால் பாகிஸ்தான் அணி பின்னடைவை சந்தித்தது . அவர்கள் இறுதிவரை போராடிய போதிலும், இலங்கைக்கு எதிரான ஒரு நல்ல போட்டியின் போட்டியில் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியவில்லை,
கடந்த 14ஆம் தேதி வியாழன் அன்று நடந்த ஆசிய கோப்பையில், சூப்பர்-4 போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டிஎல்எஸ் (DLS) இன் கீழ் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த தோல்வியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தானின் கனவு தகர்ந்தது. தற்போது அணி வீரர்கள் ஒருவரையொருவர் மோதிக்கொண்டதாக டிரஸ்ஸிங் ரூமில் இருந்து செய்தி வந்துள்ளது. உண்மையில், டிரஸ்ஸிங் ரூமில் அணித் தலைவர் பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி இடையே சில விவாதங்கள் நடந்தன, ரிஸ்வான் தலையிட வேண்டியிருந்தது.

பாகிஸ்தான் ஊடகமான போல் நியூஸ் (Bol News) இன் அறிக்கையின்படி , பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசமும், ஷஹீன் அப்ரிடியும் இலங்கையிடம் தோல்வியடைந்த பின்னர் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர் ‘போல் நியூஸ்’ செய்தியின்படி, இலங்கைக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வீரர்களை டிரஸ்ஸிங் அறைக்கு அழைத்தார். வீரர்களின் மோசமான ஆட்டத்தைப் பற்றி பாபர் பேசிக்கொண்டிருந்தார், ஆசியக் கோப்பை 2023ல் மூத்த வீரர்களின் பங்கு குறித்து பாபர் கேள்வி எழுப்பினார். அப்போது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி குறுக்கிட்டு, பொதுமைப்படுத்தக்கூடாது, நன்றாக செய்தவர்களை விமர்சிக்கக்கூடாது. குறைந்த பட்சம் சிறப்பாக செயல்பட்ட வீரர்களையாவது பாராட்ட வேண்டும் என்று கூறினார். ஷாஹீனின் இந்த விஷயம் பாபருக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பதிலளித்த பாபர் அசாம், யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் சிறப்பாக செய்யவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
பாபர், தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் சென்றதாகவும், ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் யாருடனும் பேசவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
ஷாஹீனுக்கும், பாபருக்கும் இடையேயான பேச்சு எந்த அளவுக்கு அதிகரித்தது எனதெரியவில்லை. ஆனால் அவர்களிடையேயான பிரச்சினையை தீர்க்க அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் வர வேண்டியிருந்தது. டிரஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்களிடம் அவர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை என்று பாபர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர்-4 பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் நீடித்தது
போட்டியின் சூப்பர்-4 அட்டவணையில் பாகிஸ்தான் கடைசியில், அதாவது நான்காவது இடத்தில் இருந்தது. சூப்பர்-4ல் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ந்து 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் பாகிஸ்தான் 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் பின்னர் டிஎல்எஸ் முறைப்படி இலங்கைக்கு எதிராக அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
Pakistan heated dressing room argument (Bolnews):
– Babar told players they're not playing responsibly.
– Shaheen said 'at least appreciate who bowled and batted well'.
– Babar didn't like interruption and said 'I know who's performing well'.
– Rizwan came to stop argument. pic.twitter.com/CMsoHloQH8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 16, 2023
Babar Azam – Shaheen Afridi Fight
Babar : Players aren't playing responsibly
Shaheen : Praise those who played well
Babar : I know who is playing wellThen Shaheen and Babar started abusing each other and Rizwan had to stop them which avoided body fighthttps://t.co/mwW3MVOuqy
— Shubman Gang (@ShubmanGang) September 16, 2023
Pathetic scenes in Pakistan cricket! Babar Azam's ego disrupts team harmony. Shaheen Afridi stands up, tempers flare. @_FaridKhan bhai requesting to please conform this?
#NaseemShah #BabarAzam #PakistanCricket #PakistanUnderFascism #ODIWorldCup #PakistanCricket #TeamConflict… pic.twitter.com/NJCVNClwIr— نواز
(@NawazJ78) September 16, 2023