
ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியானது நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜான்ஸ் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்க் செய்து 20 ஓவர் எட்டு விக்கட்டுகள் இழந்து 29 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணியானது 19.3 ஓவர்களின் 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது .இந்த நிலையில் லக்னோ அணியின் பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 75 ரன்கள், மிட்செல் மாஸ் 36 பந்துகளில் 72 ரன்களும் எடுத்தார்கள்.
மேலும் டெல்லி அணியிலிருந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் 48 ரன்களும் விப்ராஜ் நிகம் 55 48 ரன்கள் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதன்பிறகு கடைசியில் களமிறங்கிய டெல்லி அணியின் இம்பாக்ட் பிளேயரான அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். இவர் கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இவர் மீது எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது