2018 ஆம் வருடம் மலையாளத்தில்  வெளியான குயின் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சானியா ஐயப்பன். இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதும் வாங்கினார். அதனை தொடர்ந்து தமிழில்  இறுகப்பற்று,சொர்க்கவாசல் படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லண்டன் நடிப்பு பள்ளியில் தான் எதிர்கொண்ட விஷயத்தை  நினைவு கூர்ந்துள்ளார். அதாவது லண்டனில் படிக்க சென்ற முதல் நாளில் இருந்தது பேராசிரியர் நடத்தை சற்று எதிர்மறையாக இருந்தது.

அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் கடந்தது.  யாரும் என்னிடம் பேச முயற்சிக்கவில்லை. ஒருநாள் மாணவர்கள் பல குழுக்களாக பிரிய வேண்டிய நேரம் வந்தது. அப்போது என்னை யாரும் குழுவில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. முதலில் ஏன் என்று தெரியவில்லை? பின்னர் தான் அது எதற்காக என்பதை உணர்ந்து எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் அறையில் தனியாக அழுது கொண்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.