ஐபிஎல் – பிஎஸ்எல் பேச்சுவார்த்தை சமீபமாக சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்து வருகிறது. ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ பரிசுக்கே மோட்டார் சைக்கிள், ஹேர் ட்ரையர் மாதிரியான வித்தியாசமான பரிசுகள் வழங்கப்படும் பிஎஸ்எல் போட்டிகளைவிட, ஐபிஎல் தான் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஎஸ்எல் போட்டி நடைபெறும் நேரத்தில் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது செல்போனில் ஐபிஎல் லைவ் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை என்றும், IndiaTimes இதன் சரியான இடத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

இந்த வீடியோ இணையத்தில் வெகு வேகமாக பரவி, பலரின் கவனத்தையும் சிரிப்பையும் பெற்றுள்ளது. ஒரு நெட்டிசன், “இது பிஎஸ்எல் போட்டிக்கு டிக்கெட் இலவசமா கிடைக்குது போல… போய் ஸ்டேடியத்தில் இருந்து ஐபிஎல் தான் பார்க்கறாங்க” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

மற்றொருவர், “இவன் RAAW ஏஜெண்ட் போல… இந்தியாவோட சதி இது” என்று நகைச்சுவையோடு பதிவிட்டுள்ளார். “பிஎஸ்எல்ல தியேட்டர்-level சினிமா தான் நடக்குது” “IPL-னு சொன்னா சக்தி தான்” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.