வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறினார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தொண்டர் ஒருவர் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடும் வெயிலில் மணலில் முழங்காலால் மண்டியிட்டு சுமார் 750 மீட்டர் தூரம் சென்று வழிபாட்டு செய்தார்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த நபர் ஐயப்பன்தாங்கல் சேர்ந்த ஆறுமுகம். அவர் புதிய பேராலயத்தில் இருந்து பழைய மாதா கோவில் சிலுவை பாதை வரை கடும் வெயிலில் முழங்கால் மண்டியிட்டு சென்று வழிபாடு நடத்தினார்.

அவரது கைகளில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி இருந்தது. அவருக்கு சிலர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.