அரியலூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் அருகே மெயின் ரோட்டில் விக்னேஸ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்படுகிறது. இங்கு முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணனுக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மணிவண்ணன் அங்கிருந்த பன்னீர்செல்வம் என்பவரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.