விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் பிரகதி. இவர் அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்ததால் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். வெளிநாட்டு இசையிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோக்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இவர் டாப் இன்ஸ்டா பிரபலம் என்றே சொல்லலாம். காரணம் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் அதிகமான லைக்குகள் விழும். இப்படி தன்னுடைய புகைப்படங்களை மட்டுமே அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வரும் பிரகதி தன்னுடைய காதலர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ அவர் யாராக இருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.