சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில் சார் என்ற ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதனை திமுகவும் காவல்துறையும் மூடி மறப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அந்த சமயத்தில் ஞானசேகரன் மாணவியை பயமுறுத்த செல்போனில் சார் என்ற ஒருவருடன் பேசுவது போல் நாடகமாடியதாகவும் ஆனால் உண்மையில் வழக்கில் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி எனவும் சம்பவம் நடைபெறும் போது குற்றவாளியின் செல் போன் ஏரோப்ளேன் மோடில் இருந்தது எனவும் கூறியுள்ள நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் அவரை சிறையில் வைத்தே உரிய முறையில் புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

அதன்பிறகு யார் அந்த சார் என்று எதிர் கட்சிகள் கேள்வி எழுப்புவது தொடர்பாக நிரூபர்கள் கேட்டனர். அதற்கு திருமாவளவன் யார் அந்த சார் என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது அவரை சிறையில் வைத்தே நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தான் கூறுவதாக கூறினார். அதன் பிறகு எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய கருத்து எனவும் மேலும் இந்த விஷயத்தை அரசியலாக கூடாது என்றும் கூறினார்.