
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு விருந்தினர் இல்லத்தில் இருந்து ரயில்வே குட்செட் செல்லும் வழியில் அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வாசலில் துணி சுற்றப்பட்டு பிறந்த குழந்தை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த குழந்தையை வீசி சென்றது யார்? தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் அப்படி செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.