
பதவி காலம் முடிவதற்கு முன்பு யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. UPSC பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் போலி சான்றிதழ் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது சர்ச்சையானது.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் போலி சான்றிதழ் விவகாரத்திற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இவருடைய திடீர் ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.