
வங்கியில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணான நிஷா என்பவர் , யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் ரூ.8 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவர் முதலில் லண்டனில் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று அந்த வேலையை விட்டு விலகி தனது வேலையை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து யூடியூப்பை தொடங்கினார். இதன் மூலம் தனிப்பட்ட நிதி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்கினார். இதனால் யூடியூப் மூலமாக கடந்த ஆண்டு மே முதல் 2024 மே வரை ரூ.8 கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.