
சமீப நாட்களாக யூடியூபில் பிரபலமாக இருக்கும் இர்ஃபானுக்கும் பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வரும் அபிஷேக் என்ற இளைஞருக்கும் இடையேயான மோதல் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. யூடியூபர்கள் இர்பான் மற்றும் தயாளு ஆகியோரை பிரியாணி மேன் தொடர்ச்சியாக வம்பு இழுத்து வந்தார். இந்த நிலையில் பிரியாணி மேன் youtube சேனலில் நேற்று லைவ் செய்து கொண்டிருந்த அபிஷேக் தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்று கூறிவிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனை லைவில் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் சிலர் பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்ததாகவும் இதனை தொடர்ந்து அவர் வந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.