
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை அரும்பாக்கம் ஹோமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.