
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தோனி தோனி என்று கோஷமிட்ட ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட எம்.எஸ்.தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதல் பேட்டிங்கை முடித்துவிட்டு பீல்டிங் செய்ய சென்றது.
அப்போது பீல்டரிங் செய்ய தயாரான தோனியைப் பார்த்து ரசிகர்கள் தோனி தோனி என்று கோஷமிட்டனர். அப்போது அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட தோனி பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
" Dhoni Dhoni" Chants then MS Dhoni turns back and acknowledge the fans for their love 💛 pic.twitter.com/ehCHN9w77n
— 🎰 (@StanMSD) April 20, 2024