பா.விஜய் இயக்கியுள்ள படம் அகத்தியா. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இது ஒரு பேய் படம்.  இந்த நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசும்போது ஜீவா, “என்னுடைய தந்தை தயாரிக்கும் 99 ஆவது படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அது பெரிய பட்ஜெட் படமாக தயாராக இருக்கிறது. நான் நடித்த ஈ படமும் பெரிய பட்ஜெட் படம்தான். இன்றைய காலத்தில் ஓடிடியில்   எல்லாம் வியாபார ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. கவனமான படங்களை தயாரிக்க வேண்டி உள்ளது.

நிறைய புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்த பெருமை எனக்கு உள்ளது. தற்போது ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. ஒரே படத்தில் ஐந்து ஜானர்களின் கலவையாக பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் விதமாக ஹாரர், திரில்லர், காமெடி, ஆக்சன், அனிமேஷன் பேண்டஸி ஆகியவற்றின் கலவையாக அகத்தியா படம் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.