பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்றுள்ள தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில்  கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியானது 19.1 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்நிலையில் CSK – RCB ஆகிய இரு அணிகளும் வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.