இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீரதீரசூரன். இது விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம்.  இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை பட குழு உறுதி செய்துள்ளது. முதலில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தான் முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இன்று காலை வீரதீரசூரன் படத்தை வெளியிடுவதற்கான தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த பி4யு நிறுவனம் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு எட்டப்பட்டது. இதனையடுத்து படம் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக இருப்பதாக இயக்குனர் அருண்குமார் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார். மேலும் படம் வெளியீடு தாமதமானதற்காக பட குழுவினர் சார்பாக விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.