
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாம் நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்துவிட்டனர்.
இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் இந்த போட்டியை காண டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது கிரிக்கெட் போட்டியை காண இன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதல் நிலையில் இன்று போட்டியை பார்க்க செல்ல ரசிகர்களும் பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் டிக்கெட் வைத்திருந்தால் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். மேலும் கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் இன்று இரவு கடைசி ரயில் இரவு 12 மணிக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.