கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அறிமுகமானார். தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் புஷ்பா-2 படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். இதற்கிடையில் திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடை திறப்பு விழாவிற்காக வந்துள்ளார். அப்போது இரவில் ஆட்டோவில் தங்களுடைய தோழியுடன் ஊர் சுற்றுயுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இதை பார்த்து இணையவாசிகள் “ரசிகர்கள் கண்ணில் படவில்லையா?”  என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.