
இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் அவர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தன்னுடைய குடும்பத்தினருடன் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் மகன், அவருடைய தாயார் மற்றும் சகோதரர் குருணால் பாண்டியா உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அவருடைய மனைவி நடாஷா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் குருணால் பாண்டியா தன்னுடைய சகோதரர் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நானும் ஹர்திக் பாண்டியாவும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது.
ஒவ்வொரு இந்தியரும் தங்கள் நாயகர்களின் வெற்றியை பாராட்டும் போது அதில் என்னுடைய சகோதரரும் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக ஹர்திக் பாண்டியாவின் பயணம் மிகவும் சவாலாக இருந்த நிலையில் அது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் கிண்டல்கள் செய்யத் தொடங்கியது முதல் ஏராளமான விஷயங்கள் குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியாவும் உணர்ச்சி உள்ள ஒரு மனிதர் என்பதை மறந்துவிட்டோம். ஆனால் அந்த கடினமான பயணத்தை கூட அவர் சிரித்துக் கொண்டே கடந்து வந்துவிட்டார். அந்த கஷ்டத்தை என்னால் ஒரு சகோதரனாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இவ்வளவு கிண்டல்கள் மற்றும் பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் கருத்தை பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல உதவியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.