தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தை சுகுமார் இயக்கும் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை  தள்ளி வைத்துள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது படத்தின் சூட்டிங் இன்னும் முடிவடையாததால் டிசம்பர் 6 ஆம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)