சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதனை தொடர்ந்து பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் சரவணன் மீனாட்சி தொடர் தான் இவரை பட்டி எங்கு பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இதனிடையே  சீரியலில் நடிக்கும் பொழுதே தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் இவருக்கு பல ஆதரவு கிடைத்தது. கடந்த சில வருடத்திற்கு முன்பாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். விவகாரத்துக்கு குறித்து பல தகவல்கள் பேசப்பட்டாலும் அதற்கான உரிய விவரங்கள் இதுவரையிலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கும் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ஒரு சந்தோஷமான செய்தி விரைவில் சொல்லப் போவதாக பதிவிட்டுள்ளார். ரச்சிதாவின் இந்த பதிவு அவருடைய இரண்டாவது திருமணம் குறித்தது என்று நினைத்துக் கொண்டு சக பிரபலங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.