
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பில் கடைசியாக லால் சலாம் படம் வெளியானது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மேடை ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், ரஜினிக்கு 70, 80 வயது ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு ஹீரோயின் தேடுவது கஷ்டமாக இருக்கிறது.
அவருக்கு ஜோடியாக ஒன்று அடுத்தவன் பொண்டாட்டியாக தான் இருக்கணும். அதாவது 20 25 வயதில் ஹீரோயினை அவருக்கு ஜோடியாக ஆக்க முடியாது. திருமணமான நடிகை தான் அவருக்கு செட் ஆகும் என்ற வகையில் கூறுகிறேன். யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவருக்கு இப்போது வயதாகிவிட்டது. தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் இவர்களை தேடித்தான் போகிறார்கள். இப்படி போகும் பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாக போகிறது. அதனால் சின்ன பட்ஜெட் தானே என்று நினைக்காமல் உள்ளே இருக்கும் அந்த கதையை பாருங்கள். அதுவும் உங்களை ஒரு விதத்தில் ரசிக்க வைக்கும் என்று பேசியிருக்கிறார்.