நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடிகர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்ட நிலையில் சீமானிடம் இது பற்றி நிருபர்கள் கேட்ட போது அரசியல் மற்றும் திரையுலகம் பற்றி பல்வேறு விஷயங்களை பேசியதாகவும் அனைத்து விஷயங்களையும் ஓபன் ஆக சொல்ல முடியாது என்றும் கூறினார். இந்நிலையில் சீமான் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததை புலி  மற்றும் கழுகு ஒன்னு சேர்ந்து விட்டது போல் ஒரு பதிவை சாட்டை துரைமுருகன் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் போக்கு நிலவுவதால் அவருடைய ரசிகர்களை தன் பக்கம் இழுக்க சீமான் முடிவு செய்துதான் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போது சீமான் அவரை ஆதரித்த நிலையில் முதல் மாநாட்டுக்கு பிறகு விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் சீமான் சந்தித்த புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதோடு ரஜினிக்கு அரசியல் சரிவராது என்பதால் எதிர்த்தோம் . விஜய்க்கு அரசியல் தெரியாது என்பதால் இதற்குறோம். இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய பார்க்கணும் ப்ரோ என்று நடிகர் விஜயை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.