
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் நடிகர் கமலுக்கு மகளாக பாபநாசம் மற்றும் ரஜினிக்கு மகளாக தர்பார் ஆகிய படங்களில் நடித்திருப்பார். இவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள 35-chinaa katha kaadu திரைப்படம் கடந்த 6-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருப்பார். இந்த படத்திற்காக நிவேதா தாமஸ் உடல் எடையை அதிகரித்துள்ளார். அந்த படம் பிரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நிவேதா தாமஸ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். மேலும் படத்தில் நிவேதா தாமஸ் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அவர் உடல் எடை அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.