
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சென்று நேரில் சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னபோது அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த சீமான் திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் பார்த்தார். இந்த நிலையில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் உள்ளது அனைவருக்கும் தெரிந்தது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறினார்கள். இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது சீமான் விஜய்க்கு ஆதரவு கொடுத்து அவர்தான் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். அதாவது எம்ஜிஆர் புகழின் உச்சத்தில் இருக்கும்போது அவரை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்தை கொண்டாடினார்கள்.
ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தற்போது விஜயை சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள். இதில் என்ன பிரச்சனை. இதனை ரஜினிகாந்த் கூட ஒப்புக்கொண்டார். வெளியில் இருந்த ஒருவரை நாம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட கூடாதா என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பிறகு நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ரஜினிகாந்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். அவரை நான் சந்தித்ததில் இருந்து ஐயோ அம்மா என்று பலர் கதறுவதாக தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் என்றும் தான் ஒரு அரசியல் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சங்கி ஆவதற்கு
முன் பின் pic.twitter.com/hBTMzWQJfk
— Pokkiri Victor (@PokkiriVictor) November 27, 2024