சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஒடிசாவில் உள்ள மீனவர்கள் மீட்டு பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சௌஹான் தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது பெற்றோருடன் சரியாவில் உள்ள போரத் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார், மேலும் யாரிடமும் தெரிவிக்காமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறியதால் அவரது உறவினர்கள் அவரது கால்களைக் கட்டியுள்ளனர்” என்று சரங்கர்-பிலைகர் காவல் கண்காணிப்பாளர் புஷ்கர் சர்மா கூறினார்.

மேலும் அந்த பெண் , புதன்கிழமை இரவு, அவர் மகாநதி ஆற்றின் கரை ஓரம் அமைந்துள்ள தனது வீட்ன் பின்புறம் உள்ள காய்கறி பண்ணைக்கு சென்ற நிலையில்  வீடு திரும்பி வரவில்லை என்று அதிகாரி கூறினார். “தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது . வியாழக்கிழமை காலை, ஒடிசாவில் உள்ள ரெங்கலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சில மீனவர்களால் ஆற்றில் இருந்து..அதாவது சௌஹானின் சொந்த கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டார்,”

அவரது குடும்பத்தினர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்யவில்லை, மேலும் இந்த வழக்கில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் தெரியவில்லை, இருப்பினும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் கூறினார்.